இந்தியா-சீனா ராணுவம் இடையேயான 9ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தேதியை உறுதிப்படுத்தாத சீனா
கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர, 9ஆம் சுற்று பேச்சுவார்த்தைக்கான தேதியை சீனா உறுதிப்படுத்தாமல் உள்ளது.
8ஆம் சுற்று பேச்சுவார்த்தையின் போது படை வீரர்கள், டாங்குகள், கவச வாகனங்கள், பீரங்கிகளை விலக்கிக் கொள்ள பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்பதில் முரண்பாடு நீடிக்கிறது.
பாங்காங்சோ தென்கரை-சூசுல் பகுதியில் மலைத்தொடர்களில் சிகரங்களை கைப்பற்றி, சாதகமான நிலையில் இந்திய ராணுவ நிலைகள் உள்ளன. எனவே அங்கிருந்து படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்க வேண்டும் என சீனா பிடிவாதமாக உள்ளது.
அதேசமயம், பாங்காக்சோ ஏரியின் வடகரையில், ஃபிங்கர் ஏரியாவில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளது. அங்கிருந்து படை விலக்கம் தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
Comments