ஆரணியில் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பக தோப்பு அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் கமண்டலநாக நதி ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து, கண்ணமங்கலம், காமக்கூர், தச்சரம்பட்டு, பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
பகுதியளவு மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments