தீபாவளி பண்டிகை : ரூ. 54,000 கோடி வர்த்தகம் செய்து பிளிப்கார்ட் ,அமேசான் சாதனை!
தீபாவளி முடிந்த ஒரு மாத பண்டிகை காலத்தில், அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை, ஆன்லைன் சந்தைகளில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை கிட்டத்தட்ட 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் 54 ஆயிரம் கோடி ரூபாய்) விற்பனை செய்துள்ளள. மதிப்பிடப்பட்டதை விட 20 சதவிகிதம் அதிகமான விற்பனையை எட்டியுள்ளதாக சந்தையை கண்காணிக்கும் ரெட்ஸீர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொற்றுநோயின் காரணமாக,மக்கள் பெரிய கடைகளுக்கு சென்று வாங்குவதில் மந்தநிலை ஏற்பட்டதால்
ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாக ரெட்ஸீர் அறிக்கை தெரிவிக்கிறது.
பண்டிகை கால விற்பனையின் போது, ஒவ்வொரு 10 ஆர்டர்களிலும் நான்கு ஆர்டர்கள் முதல் முறையாக ஆன்லைன் பயன்படுத்துவோரிடமிருந்து வந்ததாக தெரிகிறது.
தீபாவளி விற்பைனை சமயத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆன்லைன் சந்தை மொத்த விற்பனையில் 88 சதவிகிதத்தை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
Comments