பண்ருட்டி செல்வமுருகன் போலீஸ் சித்திரவதையால் உயிரிழந்ததாக எழுந்த புகார்...உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜிப்மரில் உடல் மறுபிரேதப் பரிசோதனை

0 1053
பண்ருட்டி செல்வமுருகன் போலீஸ் சித்திரவதையால் உயிரிழந்ததாக எழுந்த புகார்...உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜிப்மரில் உடல் மறுபிரேதப் பரிசோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த செல்வ முருகன், போலீஸ் கஸ்டடி சித்திரவதையால் உயிரிழந்ததாக எழுந்த புகாரில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகனை, கடந்த 30ஆம் தேதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்தனர். விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெய்வேலி போலீசார் சித்திரவதையால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக மனைவி பிரேமா வழக்குத் தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மறுபிரேதப் பரிசோதனை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments