கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்... போக்குவரத்து துண்டிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றில் 5 வருடங்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நல்லாட்டுர் அருகே தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக அங்குள்ள அம்மா பள்ளி அணை நிரம்பி தற்போது விநாடிக்கு 1100 கன அடி நீர், கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், என்.எம் கண்டிகையில் இருக்கும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தாமரைப்பாக்கம் அருகே உள்ள அணைக்கட்டு பகுதிகளிலும் நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது. வெள்ளப் பெருக்கு காரணமாக அசம்பாவிதம் நேரிடாமல் இருக்க ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments