இரும்பாலைக்குள் 7 நாள்கள் தங்கியிருந்த இருளர்கள்... ரசல் குக்ரி முதல் கண்ணாடி விரியன் வரை பிடிபட்டன!

0 23598

சேலம் அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை வளாகத்தில் விஷப்பாம்புகள் உள்ளிட்ட 67 பாம்புகளை இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தினர் பிடித்து வனத்துறை உதவியுடன் அடர்ந்த வனத்தில் கொண்டு சென்று விட்டனர்.

சேலம் மாவட்டம். மேட்டூரையடுத்த பொட்டனேரியில் ஜே.எஸ். டபிள்யூ இரும்பு உருக்காலை 800 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆலையில் 5,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலை வளாகத்தில் ஏராளமான பாம்புகளும் இருந்தன. இந்த பாம்புகளால் ஆலை வளாகம் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இதையடுத்து, ஆலை நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்டம் ,பேரூரில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தினரை பாம்பு களை பிடிக்க அணுகினர். தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள்‘ ஆலைக்குள் தங்கியிருந்து இருளர்கள் பாம்புகளை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருளர்களின் முயற்சியால் நல்லபாம்பு, கட்டுவிரியன் , கண்ணாடி விரியன் மற்றும் பச்சைப்பாம்பு ,தண்ணீர் பாம்பு, சாரை பாம்பு , அரிய வகை ரசல் குக்ரி உள்ளிட்ட 67 பாம்புகளை உயிருடன் பிடிக்கப்பட்டன. அரிய வகை பாம்பான ரசல் குக்ரி ஒரு அடி நீளம் மட்டுமே வளரும் தன்மைக் கொண்டது .

பின்னர், மேட்டூர் வனத்துறை அலுவலர் பிரகாஷ் முன்னிலையில் பிடிபட்ட பாம்புகள் வட பர்கூர் காப்புக் காட்டில் விடப்பட்டன. ஏற்கெனவே இதே வளாகத்தில் 52 பம்புகள் பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments