சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3ஆவது நாளாக மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி

0 1554
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3ஆவது நாளாக மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் கனமழை மற்றும் தண்ணீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்றாவது நாளாக நிவாரண உதவிகளை வழங்கினார்.

நொச்சிக் குப்பம் பகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து டூமிங் குப்பம் சென்ற மு.க.ஸ்டாலினை, அங்கிருந்தவர்கள் ஆவலோடு சூழ்ந்து கொண்டு, மிகப்பழமையான ஹசவுசிங் போர்டு கட்டடங்களை புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் பட்டினப்பாக்கம் முல்லைமாநகர் பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கும் நிவாரணப் பொருட்களை விநியோகித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments