சென்னையில் உள்ள ஏ.வி.எம். எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
சென்னையில் உள்ள ஏ.வி.எம். எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஏ.வி.எம். எர்த் மூவர்ஸ் நிறுவனம் அரசின் கட்டுமானம் தொடர்பான திட்டப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.
இந்நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாயை, கணக்கில் காட்டாமல் வேறு கணக்குகளுக்கு மாற்றி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகராய நகர், நங்கநல்லூர் உள்பட அந்நிறுவனத்திற்கு சொந்தமான10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Comments