விசாகப்பட்டினத்தில் கரை தட்டிய கப்பலை மிதக்கும் உணவகமாக மாற்ற திட்டம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரை ஒதுங்கிய வங்கதேச கப்பலை மிதக்கும் உணவகமாக மாற்றுவதற்கான அனுமதிக்காக காத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வங்கதேச சரக்கு கப்பலான எம்வி மா (MV Maa) கடந்த அக்டோபரில் நங்கூரம் உடைந்து பலத்த காற்றால் Tenneti Park என்ற பகுதிக்கு கரைக்கு அடித்து வரப்பட்டது. கரைக்கு வந்த கப்பலை பார்ப்பதற்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியதை அடுத்து, அதை சுற்றுலா திட்டத்திற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கப்பல் உரிமையாளரிடம் பேசி, தேவையான அனுமதிகளுக்கும் விண்ணப்பித்து பரிசீலனையில் இருப்பதாக விசாகப்பட்டிமனம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Andhra Pradesh: Visakhapatnam admn proposes to convert Bangladeshi vessel MV Maa into a floating restaurant after obtaining statutory clearance & clearance from its owner
— ANI (@ANI) November 27, 2020
MV Maa, anchored at Vizag Port Trust, drifted into sea in Oct when its anchor broke & is at Tenneti Park now pic.twitter.com/rGy7zw3nE9
Comments