”பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்” ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 2254
”பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்” ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், ராணிப்பேட்டை மற்றும்  காஞ்சிபுரம் மாவட்டங்களில் அந்த ஆற்றின் கரையோரம்  உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவ கொண்ட அணையும், ராணிப்பேட்டை மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை மற்றும் வாலாஜாபேட்டையில் உள்ள தடுப்பு அணையும் திறக்கப்பட்டுள்ளன. தடுப்பு அணைக்கு வினாடிக்கு 44,000 கன அடி நீர் வரும் நிலையில், 40 ஆயிரம் கன அடி நீர் பாலாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

பாலாற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது என்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments