கிருஷ்ணகிரி: ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் திருட்டு தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை என்னுமிடத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் மும்பையை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியில், ஓட்டுநர்களை தாக்கி விட்டு மர்ம நபர்கள் செல்போன்களை திருடிச் சென்றனர். இதில் முக்கிய குற்றவாளியான பரத் தேஜ்வாணியை 18ஆம் தேதி டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளியான அமிதாபா டட்டாவை கொல்கத்தாவில் வைத்து கைது செய்த தனிப்படை போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Comments