இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை பயணம்

0 1383
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை பயணம்

பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று இலங்கை செல்கிறார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

வங்கதேசம், மொரிஷியஸ், செஷல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. இதற்கு முன்பு டெல்லியில் 2014ல் இந்த மாநாடு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments