மறைந்த கால்பந்தாட்ட நாயகன் மாரடோனாவுக்கு ரசிகர்கள் அஞ்சலி

0 3074
மறைந்த கால்பந்தாட்ட நாயகன் மாரடோனாவுக்கு ரசிகர்கள் அஞ்சலி

மாரடைப்பால் காலமான கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அர்ஜண்டினாவில் பியூனஸ் ஏரிஸ் நகரில் தேசியக் கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்ட மாரடோனா உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பல்லாயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கொல்கத்தாவில் கடந்த 2017ம் ஆண்டு மாரடோனா வந்ததையொட்டி அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கும் நேற்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே ஒடிசாவில் பூரி கடற்கரையில் உலகப் புகழ் பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மாபெரும் விளையாட்டு வீரனுக்கு தனது கலையால் மணல் சிற்பம் வடித்து அஞ்சலி செலுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments