வேலூர்: மோர்தானா அணையிலிருந்து 11ஆயிரம் கன அடி நீர் திறப்பு...
நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையிலிருந்து 11ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கௌவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சேம்பள்ளி, ஜிட்டப்பள்ளி, மோர்தானா, குடியாத்தம் பகுதிகளில் ஆற்றின் கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றைப் பார்க்க பொதுமக்கள் வருவதால் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments