நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடிக்கு சேதம்?...இடைக்கால நிவாரணமாக ரூ.50 கோடி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்
புதுச்சேரியில் நிவர் புயலால் 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என கணக்கெடுத்துள்ளதன் அடிப்படையில், இடைக்கால நிவாரணமாக 50 கோடி ரூபாயை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும், 55 ஹெக்டேர் வாழை தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments