தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 5046
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில், கொரோனா உயிரிழப்பு பெருமளவில் குறைந்து, 28 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 797 பேர், குணம் அடைந்து வீடு திரும்பினர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 464 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சென்னையில், புதிதாக 396 பேருக்கு, தொற்று உறுதி செய்யப் பட்டது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக் குறிச்சி மற்றும் நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி, 9 மாவட்டங் களைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கோவையில் 94 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலி ஆனார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments