மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி நினைவுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரத்தன் டாடா

0 4079
மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி நினைவுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ரத்தன் டாடா

மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி தொழிலதிபரான ரத்தன் டாடா நினைவுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதை வெளியிட்டுள்ள அவர், தாக்குதலின் முக்கிய நிகழ்விடங்களில் ஒன்றான மும்பை தாஜ்மஹால் ஹோட்டலின் படத்தையும் அதில் இணைத்துள்ளார்.

அந்த வெட்கம் கெட்ட தாக்குதல் என்றைக்கும் மறக்கப்படாது என டாடா குறிப்பிட்டிருக்கிறார். 100 ஆண்டு பழமையான இந்த தாஜ்மஹால் ஹோட்டல் டாடா குழுமத்திற்கு சொந்தமானதாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி லஷ்கர் தீவிரவாதிகள் மும்பையின் பல இடங்களில் நடத்திய தீவிரவாத வெறியாட்டத்தில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

தாஜ்மஹால் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் பணியாளர்கள், தங்கியிருந்தவர்கள் என 31 பேர் உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு ஹோட்டல் சீரமைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்று 2009 ல் ஹோட்டலில் திறந்து வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments