2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீது சிறையில் இல்லாமல் வீட்டிலேயே உள்ளதாகத் தகவல்
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் சிறையில் இல்லாமல் வீட்டில் உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் கடல்வழியாகப் படகில் வந்து மும்பை நகருக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சொகுசு விடுதிகள், ரயில் நிலையம் ஆகியவற்றில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீதை ஒப்படைக்க இந்தியா கோரியும் பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதச் செயலுக்கு நிதியுதவி செய்த வழக்கில் ஹபீஸ் சயீதுக்குப் பாகிஸ்தான் நீதிமன்றம் பத்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
எனினும் அவர் சிறையில் இல்லை என்றும், லாகூரில் உள்ள வீட்டில் இருப்பதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments