பாஜக எம்எல்ஏவுக்கு லாலு பிரசாத் ஆசை காட்டுவது போன்ற ஆடியோ டேப் வெளியாகி சர்ச்சை
ராஞ்சி சிறையில் இருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், பீகார் பாஜக எம்எம்ஏ ஒருவருடன் பேரம் பேசும் ஆடியோ டேப் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் லாலு, பீகார் பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான் என்பவரிடம், சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தால், தாங்கள் ஆட்சிக்கு வரும் போது அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டும் ஆடியோவை, பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி வெளியிட்டுள்ளார்.
இப்போதுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்க்கப்படும் எனவும் அதில் லாலு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
लालू यादव ने दिखाई अपनी असलियत
— Sushil Kumar Modi (@SushilModi) November 25, 2020
लालू प्रसाद यादव द्वारा NDA के विधायक को बिहार विधान सभा अध्यक्ष के लिए होने वाले चुनाव में महागठबंधन के पक्ष में मतदान करने हेतु प्रलोभन देते हुए। pic.twitter.com/LS9968q7pl
Comments