ஆஸ்காருக்கு போகும் 'ஜல்லிக்கட்டு'... தேர்வு செய்யப்பட்ட பின்னணி என்ன?
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் வெளிவந்த ”ஜல்லிக்கட்டு” திரைப்படம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த 'ஜல்லிக்கட்டு' திரைப்படம், எழுத்தாளர் ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வெளியானது. இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் 2021 ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ஜல்லிக்கட்டு படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியாவின் சார்பாகப் போட்டியிட இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இந்தப் படத்தைத் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்துத் தேர்வுக் குழுவின் தலைவர் ராகுல் ராவைல், "மனிதர்களுக்குள் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. மனிதர்களின் உணர்வுகள் விலங்குத் தன்மையைவிட மோசமானதாக இருக்கிறது என்பதை இந்தப் படம் அற்புதமாகச் சித்தரித்துள்ளது. லிஜோ மிகத் திறமையான இயக்குநர். இந்தப் படத்தில் காட்டப்பட்ட உணர்ச்சி மிகுந்த காட்சிகள் எங்களை உலுக்கிவிட்டன. அதனால்தான், இந்தப் படத்தைத் தேர்வு செய்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Malayalam film 'Jallikattu' India's official entry at Oscars in International Feature Film category: Film Federation of India
— Press Trust of India (@PTI_News) November 25, 2020
Comments