புயல் கரையைக் கடந்தாலும் 4 மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையிலும் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பலத்த காற்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பலத்த காற்று காரணமாக வீட்டுக் கூரைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சரியாக இணைக்கப்படாத உலோகங்கள் காற்றின் வேகத்தில் கழன்று போகலாம் என்றும், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பில் பகுதியளவு சேதம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் காரணமாக பப்பாளி, வாழை மரங்கள் சேதமடைய வாய்ப்பு இருப்பாகவும், மரங்களின் கிளைகள் உடைந்து விழ வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments