நிவர் புயல் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 6057
நிவர் புயல் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

நிவர் புயலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும் ராணிபேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் 55 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments