நிவர் புயல் காரணமாக வெறிச்சோடிய சென்னை நகரம்

0 1903
நிவர் புயல் காரணமாக நேற்று சென்னையில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது.

நிவர் புயல் காரணமாக நேற்று சென்னையில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னையில் நேற்று கடைகள் முழுமையாகவே அடைக்கப்பட்டன.

ஏராளமான உணவகங்கள் கூட நேற்று மூடப்பட்டிருந்தன. கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று ஆள் அரவமின்றி காட்சி அளித்தன. நகரில் குறைந்த அளவுக்கு இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளும் பயணிகள் இல்லாமல் காலியாகவே சென்றன.

சாலைகள் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கியிருந்ததால் ஆட்டோக்களும் பெரிதளவில் காணப்படவில்லை.

மீண்டும் ஊரடங்கை நிவர் புயல் நினைவூட்டும் வகையில் நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments