நிவர் புயல் கரையைக் கடந்த பின்னரும் சென்னையில் பலத்த காற்று
நிவர் புயல் கரையைக் கடந்த பின்னரும் சென்னையில் தற்போதும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
தொடர்ந்து வீசி வரும் வலுவான காற்று காரணமாக மெரினா கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழ வாய்ப்பு இருப்பதால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் சிலர் தடுப்புகளை மீறி வாகனங்களில் உலா வந்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடல் அலைகள் வழக்கத்தை விட சீற்றமாகக் காணப்பட்டன.தற்போது அங்கு ஒன்றரை மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பி வருகின்றன.
முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்தியதால் படகுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
பலத்த காற்றின் காரணமாக அணுகு சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டுள்ளது. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கடற்கரையை பொதுமக்கள் பார்வையிட வருகின்றனர்.
Comments