சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் முழுவதுமாக மழைநீர் தேக்கம்
சென்னை ஜிஎஸ்டி சாலை அருகே உள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மழைநீர் தேங்கியுள்ளதால், அவசரத் தேவைக்கு கூட, பொதுமக்கள், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை ஜிஎஸ்டி சாலையையும், நங்கநல்லூர், பழவந்தாங்கல், உள்ளகரம், மூவரசம்பேட்டை பகுதிகளையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக, இந்த சுரங்கப்பாதை உள்ளது.
இதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய அதிகப்படியான மழைநீர், பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை மூழ்கடித்துள்ளது.
இதனால், நங்கநல்லூர், பழவந்தாங்கல், உள்ளகரம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் முழுவதுமாக மழைநீர் தேக்கம் #Chennai | #NivarCyclone | #HeavyRain | #Flood | #Subway https://t.co/zg9Hf4NemK
— Polimer News (@polimernews) November 25, 2020
Comments