தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

0 1697
தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

நிவர் புயலின் காரணமாக தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், உள்நோயாளிகள் இருக்கும் பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் குளம் போல் தேங்கி நின்றது.

இதனையடுத்து, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி நேரில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குள் தேங்கிய நீரை அகற்றும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments