நிவர் புயலை எதிர்கொள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட மத்திய படைகள் விரைந்தன

0 1341
நிவர் புயலை எதிர்கொள்ள மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட மத்திய படைகள் விரைந்தன

நிவர் தீவிர புயலால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கடலோரக் காவல்படை மற்றும் முப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

கடலோர காவல் படையின் 100 வீரர்கள் அடங்கிய 5 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரு குழுக்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் 80 வீரர்கள் அடங்கிய 8 குழுக்கள் 2 படகுகளுடன் சென்னைக்கும், 6 பேரிடர் மீட்பு குழுக்கள் திருச்சிக்கும் சென்றுள்ளன.

புயல் கரையைக் கடந்த பின் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விமானப்படையின் 8 ஹெலிகாப்டர்கள் பெங்களூரு, சூலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் வெள்ள மீட்புக் குழுக்கள் சென்னை, நாகப்பட்டினம் ராமேஸ்வரம் மற்றும் கடற்படை தளம், விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஐஎன்எஸ் ஜோதி என்ற கப்பல் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் மீட்புக்குழுக்களுடன் தேவைப்படும் இடத்திற்கு செல்ல தயாராக இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments