நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ரயில்கள் ரத்து 12 ரயில்கள் பகுதியளவு ரத்து

0 2239
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ரயில்கள் ரத்து 12 ரயில்கள் பகுதியளவு ரத்து

புயல் முன்னெச்சரிக்கையாகப் பல்வேறு நகரங்களிடையே 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 12 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இன்று புறப்பட இருந்த கன்னியாகுமரி - நிசாமுதீன், ராமேஸ்வரம் மண்டுவாடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை - காரைக்குடி, சென்னை - மதுரை, சென்னை - திருச்சி நகரங்கள் இடையிலான 6 விரைவு ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை - கோவை, சென்னை - பெங்களூர், சென்னை - திருப்பதி நகரங்களிடையான 12 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 28ஆம் தேதி நிசாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்குப் புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூர் - மயிலாடுதுறை, எர்ணாக்குளம் - காரைக்கால், கோவை மயிலாடுதுறை ரயில்கள் திருச்சியில் நிறுத்தப்பட்டுத் திருச்சியில் இருந்தே புறப்பட்டுச் செல்லும்.

திருவனந்தபுரம், மங்களூர், ஆலப்புழை ஆகிய நகரங்களில் இருந்து இன்று புறப்படும் ரயில்கள் ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் நிறுத்தப்பட்டு நாளை அங்கிருந்தே புறப்பட்டுச் செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு இன்று புறப்பட இருந்த ரயிலும், மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நாளை புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை - ஐதராபாத் இடையே நாளை புறப்பட இருந்த இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து பிகானிருக்கு நாளை புறப்பட இருந்த ரயிலும், பிகானிரில் இருந்து மதுரைக்கு வரும் 29ஆம் தேதி புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து சாண்ட்ராகச்சிக்கு நாளை புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்தாகும் ரயில்களுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கட்டணத் தொகையை ஆறு மாதம் வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments