சென்னையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் - டேவிட் வார்னர் பதிவு
தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல், சென்னைக்கு 250 கிலோமீட்டர் தென்கிழக்கிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் மற்றும் புதுச்சேரிக்கு 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அதி தீவிர புயலாக மாறி, இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை, தமிழக-புதுச்சேரி கடலோரத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிவர் புயலின் நிலவரம் பற்றி அறிந்துள்ள ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேனும், ஐபிஎல்யில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் இன்ஸ்டகிராம் தளத்தில் அதுபற்றி பதிவிட்டுள்ளார். சென்னையில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்று இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் எழுதியுள்ளார்.
இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைதங்களில் பகிர்ந்து வருகின்றனர்,
Comments