உபரிநீரால் அச்சம் வேண்டாம்... தெளிவுபடுத்திய முதலமைச்சர்
அடையாறு தூர்வாரப்பட்டுள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் என்றும், பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஏரியின் கொள்ளளவு, நீர்வரத்து, வெளியேற்றம், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடையாறு முறையாகத் தூர்வாரப்பட்டு நீர்வழித்தடம் தடங்கலின்றி உள்ளதால் உபரி நீர் பாதுகாப்பாகக் கடலுக்குச் சென்றுவிடும் என்றும், எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார்.
Comments