கொரோனா தடுப்பு மருந்து விநியோகிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா தடுப்பு மருந்து விநியோகிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்குத் தரப்படும் தடுப்பு மருந்து அனைத்து வகை பரிசோதனைகளுக்குப் பிறகு தரமான அறிவியல் பூர்வமான மருந்தாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக மோடி தெரிவித்தார்.
மிகவும் விரைவான முறையில் அடிமட்டம் வரை கொரோனா தடுப்பு மருந்து போய்ச் சேர வேண்டியதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மாநில அரசுகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
#WATCH "Safety is as important as speed for us, whichever vaccine India will give to its citizens will be safe on all scientific standards. Vaccine distribution strategy will be chalked out in coordination with states," PM Modi during a meeting with CMs on #COVID19 pic.twitter.com/A1Polkqez4
— ANI (@ANI) November 24, 2020
Comments