லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு?
லேண்ட்லைன் போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை அடுத்த ஆண்டு முதல் அமலாகிறது.
லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து அலைபேசி எண்களை அழைத்துப் பேசுவதற்கு, இதுவரை குறிப்பிட்ட பத்து இலக்க மொபைல் எண்ணை மட்டும் அழுத்திப் பேசினால் போதுமானதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த போன்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்க புதிய கட்டுப்பாடு முறை விரைவில் அமலாகிறது. அதன்படி வரும் ஜனவரி 1ம் தேதி முதல் லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments