”துறைமுகங்களில் பேரபாயத்தின் குறியீடு” 10ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு

0 5707
”துறைமுகங்களில் பேரபாயத்தின் குறியீடு” 10ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு

நிவர் புயல் கரையைக் கடக்கவிருப்பதையொட்டிப் பேரபாயத்தின் குறியீடாகக் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளித் துறைமுகங்களில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிரப் புயலாக உருவெடுத்துள்ளது. இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.

புயல் கரையேறும் இடத்தில் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் பேரபாயத்தை விளைவிக்கும் வலிமையுடையது என்பதை அறிவிக்கும் வகையில் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, குளச்சல் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments