நிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…! கரையை கடக்காத மீம்ஸ்கள்

0 28385
நிவர் புயலை துவம்சம் செய்யும் வைகை புயல்…! கரையை கடக்காத மீம்ஸ்கள்

புயல் எப்போது கரையை கடக்கும், என்ன பாதிப்பு ஏற்படுமோ என எண்ணி பரிதவித்துக் கொண்டிருப்போர் ஒருபுறம் இருக்க, நெட்டிசன்களோ நிவர் புயலை நம்ம ஊர் வைகைப்புயலை வைத்து மீம்ஸ் வெளியிட்டு கலகலப்பூட்டி வருகின்றனர்.

கொரோனாவையும், நிவர் புயலையும் சகலையாக்கி..., வைகை புயலின் டயலாக்குகளை இரவல் வாங்கி சகட்டுமேனிக்கு மீம்ஸ்களால் சடுகுடு ஆடிவருகின்றனர் நம்ம ஊர் நெட்டிசன்கள்..!

ஒன்ன நம்புனா வேலைக்கு ஆகாது, சும்மா இழுத்துக்கிட்டே போய்கிட்டு இருக்க..... இனி ஓரமாக உக்காந்து அண்ணனோட வேலையை பார் என்று கொரோனாவை பார்த்து நிவர் புயல் சொல்வது போல கைப்புள்ளைய வைத்து கலாய்த்து வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு மீம்ஸ்.

கரையைக் கடக்க வந்த நிவர் புயலை கடக்க விடாமல் நம்ம வைகைபுயல் சூனாபானா டவலால் தடுத்து விரட்டுவது போன்று மற்றோரு மீம்ஸ் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் தகவலை அறிந்து பீதியாக இருக்கும் நம்மவர்களின் மன நிலையை, ஒரு வருசத்துல ஒரு பிரச்சனை வந்தா பரவாயில்லை, ஒரு வருஷமே பிரச்சனையாக வந்தா என்ன பன்றது என்று மீம்ஸ் வழியாக பிரதிபலித்துள்ளனர்.

சென்னையில் எதிர்பாராத நிலையில் வெள்ளம் வந்ததை நினைவூட்டும் விதமாக தீப்பொறி திருமுகம் ரப்பர் டியூப்புடன் அலர்ட்டாக படுத்து தூங்குவது போன்ற மீம்ஸ் ஒன்றும் வலம் வருகின்றது.

புயலுக்கான முன் எச்சரிக்கையாக வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவித்துள்ள நிலையில் தாங்கள் ஒரு வருடமாக வீட்டுக்குள் தான் இருக்கிறோம் என கொரோனா ஊரடங்கை மறைமுகமாக சுட்டிக்காட்டி சுட்டித்தனமான மீம்ஸ் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

அமைச்சர் ஒருவர் கையில் விலையில்லா மின் விசிறியை வைத்துக் கொண்டு, புயலை கரையை கடக்க விடாமல் தடுப்பது போல ஒரு மீம்ஸ் ட்ரெண்டிங் அடித்து வருகின்றது.

மீம்ஸ்களால் கலகலப்பூட்டும் நெட்டிசன்கள் ஒரு புறம் என்றால், தேவையான மீட்புப் பணிகளை தயார் நிலையில் வைத்துள்ளது தமிழக அரசு, புயல் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம் என்றும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மக்களிடம் நம்பிக்கையூட்டி வருகின்றது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments