நிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்?

0 9049
நிவர் புயல்..... நாளை என்ன நடக்கும்?

நிவர் புயல் நாளை கரையை கடக்கும் போது தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அதிகன மழை முதல், கனமழை வரை பெய்யுமென்றும், 5 மாவட்டங்களில் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக நாளை தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புயல் நாளை மாலை கரையை கடக்கும் போது, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவர் புயலால் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் 21 செ.மீட்டருக்கு மேலான அதீத கனமழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீட்டர் வரையிலான கன முதல் மிக கன மழை பெய்யக்கூடுமன தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments