தேசிய பாதுகாப்பை முன்னிட்டு மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை. மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசு மேலும் 40 க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.
இந்திய அரசு, இன்று செவ்வாய் கிழமை, மேலும் 43 தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காம் கார்டு , அலிபே உள்ளிட்ட இந்த செயலிகள் எல்லாமே சீன செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழிற்நுட்பம் சட்டப்பிரிவு 69 ஏ க்கு உட்பட்டு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று இந்த அரசாணை அறிவிக்கிறது.
உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டுதான் இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜூன் மாதம் 29 ம் தேதி 59 செயலிகளும் செப்டம்பர் 2 ம் தேதி 118 செயலிகளும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments