நிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்

0 5332
நிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்

நிவர் புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டது.

கடலூர், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

மேலும், மேற்குறிப்பிட்ட 7 மாவட்டங்களிலும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சரியாக அரசு அறிவித்தப்படி அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

மாவட்டங்களுக்குள்ளும், பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பேருந்து நிறுத்தம் பற்றி செய்தி அறியாமல் வந்திருந்த சில பயணிகள், செய்வதறியாமல் பேருந்து நிலையத்திலேயே நின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments