சௌகார்பேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட தலில் சந்த் சகோதரர் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

0 4890
சௌகார்பேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட தலில் சந்த் சகோதரர் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை சௌகார்பேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட பைனான்சியர் தலில் சந்தின் சகோதரர் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சௌகார்பேட்டை மூவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா, மாமனார் தலில் சந்த், அவரது சகோதரர் மகன் விஜயகுமார், தலில் சந்த் மருமகன் ஹேமந்த் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாககூறியிருந்தார். இது வழக்கை திசை திருப்பும் முயற்சியோ என சந்தேகம் இருந்தாலும், இது குறித்து விசாரிக்க விஜயகுமார் மற்றும் ஹேமந்த்தை யானைகவுனி போலீசார் அழைத்துள்ளனர்.

இந்த நிலையில் விஜயகுமார் ஆர்.கே.நகரில் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இந்தியில் பேசி வீடியோ ஒன்றை விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

அதில் தன் மீதும் ஹேமந்த் மீதும் ஜெயமாலா பாலியல் குற்றச்சாட்டு வைத்த நிலையில், கொலைக் குற்றவாளிகளை விசாரிப்பது போல் தங்களை போலீசார் விசாரிப்பதாகக் கூறியுள்ளார். தங்கள் குடும்பமே அச்சத்தில் உள்ளதாகவும், தனது மகள் பயத்தில் 5 நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாகவும் விஜயகுமார் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments