தோனியின் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. தோனிக்கு கபில்தேவ் புகழாரம்.

0 1857

கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவிற்காக உலக கோப்பையை வென்றெடுத்த இரு வீரர்கள் கபில்தேவ்வும் எம்.எஸ் தோனியும். 
வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்த போது, 1983 ம் வருடம் அவர்களை வீழ்த்தி முதன் முறையாக உலக கோப்பையை இந்தியாவுக்குப்பெற்று தந்தவர் கபில் தேவ்.
2007 ம் வருடம் T20 உலக கோப்பையையும் 2011 ம் வருடம் மீண்டும் ஒரு நாள் உலக கோப்பையையும் இந்தியாவிற்குப்பெற்று தந்த பெருமைக்குரியவர் தோனி.

உயர்ந்தவர்களை உயர்ந்தவரே அறிவார் என்பது போல தோனியின் அருமையை உணர்ந்து கபில் தேவ் பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை நேகா நடத்திய ஒரு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய கபில் தேவ், கேப்டன் என்றால் அது தோனி தான். என்னுடைய கபில் 11 அணியில் அவர் இடத்தை யாராலும் தொட முடியாது. என்று தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்..

அவரது பேச்சு, தோனிக்கு மட்டுமல்ல தோனியின் ரசிகர்களுக்கும் அதிக சந்தோஷத்தை அளிப்பதாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments