7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

0 2408
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து செய்யப்பட்ட முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இன்று காலை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 7.5% உள் ஒதுக்கீடை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படியும், அதுவரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

உள் ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்ட நிலையில், கலந்தாய்வை நிறுத்திவைத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கலந்தாய்வில் தலையிட முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், பட்டியலில் வரும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் பதிலளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments