ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு தேவைப்படாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
அமெரிக்க மருந்துக்கம்பெனியான ஃ பைசர் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்குத் தேவைப்படாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே 5 தடுப்பு ஊசி மருந்துகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் 3 மருந்துகள் 2ம் 3ம் கட்ட மருத்துவப்பரிசோதனைகளில் பாதுகாப்பையும் செயல்திறனையும் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ''' ஃபைசர் மருந்துக்கம்பெனி தயாரித்துள்ள தடுப்பூசி இன்னும் முழு அனுமதி பெறாத நிலையில்தான் உள்ளது.முழு அனுமதி பெற்றாலும், தங்களுடைய நாட்டுக்கு தேவையான மருந்துகள் தயாரித்து வழங்கவே அந்த கம்பெனி முதலில் முற்படும். ஆனால், அதற்குள் நம்முடைய நாட்டின் மருந்தே பயனுக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் நாம் ஃபைசர் மருந்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை '' என்று தெரிவித்துள்ளார்.
ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு தேவைப்படாது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் #Pfizervaccine #Covid19 #CoronaVaccine https://t.co/tTQK22Gdkw
— Polimer News (@polimernews) November 24, 2020
Comments