நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

0 4612
நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

நிவர் புயல் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளது

நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும்

தற்போது சென்னையில் இருந்து 450கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது

நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 410கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

நாளை கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 லிருந்து 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் காற்றின் வேகம் அதிகரிக்கும்

கடலோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயத்தில் 120கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூரில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்

கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

நிலப்பகுதியை அணுகும் போது புயலின் வேகம் குறைவது இயல்பு

வேகம் குறைந்தாலும் நிவர் புயல் வலுப்பெறும் என்பதில் மாற்றம் இல்லை

தற்போதைய கணிப்பின் படி புதுச்சேரிக்கு அருகே தான் புயல் கரையை கடக்கும்

புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் நிவர் புயலின் தாக்கம் இருக்கும்

புயல் பயணிக்கும் திசை மாறுமா என்று தற்போதைய சூழலில் கணிப்பது கடினம்

நிவர் புயல் வேகம் குறைந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments