எஸ்.ஐ தேர்வு வினாத்தாள் ரூ 5,000 ... விபத்தால் சிக்கிக் கொண்ட போலி சப்- இன்ஸ்பெக்டர்

0 8979

காவல்துறையில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும் எஸ்.ஐ தேர்வுக்கு வினாத்தாள்களை பெற்று தருவதாக கூறி கல்லூரி மாணவர்களை ஏமாற்றி பணம் பறித்த போலி சப்-இன்ஸ்பெக்டரை,கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கெரடா பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் . நீலகிரி மாவட்டத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாக தன்னை பல இடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார் , படித்த இளைஞர்களுக்கு போலீசில் வேலை வாங்கி தருவதாக கூறி வசூல் செய்துள்ளார். போலீஸ் உடையில் வாகன தணிக்கை ஈடுபட்டதோடு, ,அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது

ஏற்கெனவே, கோவை சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் , கோத்தகிரி போலீஸ் நிலையங்களில் இவர் மீது 4 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்த நிலையில் , போலீஸ் உடையில் இருப்பது போலவும்,உயர் அதிகாரிகளுடன் இருப்பது போன்ற புகை படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினோத்குமார் பதிவிட்டுள்ளார் .

இதை கண்ட கோவை செல்வபுரம் பகுதியைசேர்ந்த கல்லூரிமாணவர்கள் மூன்று பேர் இவருக்கு நண்பர்களாகி உள்ளனர் . அவர்களிடத்தில் தனக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் நன்றாக தெரியும் . உங்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான வினாத்தாள்களைப் பெற்று தருவதாகவும் அதற்கு .தலா ரூ. 5, 000 என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவர்கள் கோத்தகிரி சென்று முன் பணமாக 3,000 ரூபாயை கொடுத்துள்ளார் .

அப்போது, வினோத் குமாருடன் அந்த இளைஞர்களும் காரில் சென்றுள்ளனர். அப்போது, வினோத்குமார் ஓட்டிய வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு சென்ற நிஜ போலீசார் வினோத்குமார் மற்றும் இளைஞர்களிடத்தில் விசாரணை நடத்தினர். வினோத்குமார் சப்- இன்ஸ்பெக்டர் என்று கூறி இளைஞர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. தொடர்ந்து , வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments