மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 69 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களில் மின்வாகன சார்ஜ் வசதி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் உள்ள 69 ஆயிரம் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களிலும், தலா ஒரு மின்வாகன சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காணொலி கருத்தரங்கு ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவிக்கும் என்றார்.
மின்வாகனங்களுக்கான விலையை குறைக்குமாறு அவர் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு தரப்பில், மின்சார கார்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 2 மற்றும் 3 சக்கர மின் வாகன விலையில் இருந்து பாட்டரியின் விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த வாகனங்கள் 30 சதவிகிதம் விலை குறைந்துள்ளன.
Govt plans to set up at least one electric vehicle charging kiosk at around 69000 petrol pumps across the country & it's also working towards making India a global automobile manufacturing hub in next 5 yrs, says Union Minister Nitin Gadkari: Ministry of Road Transport & Highways pic.twitter.com/86uuXiIUIe
— ANI (@ANI) November 23, 2020
Comments