பலத்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் உயர்கிறது- அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

0 3072

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் தீவிரமடைந்து நாளை, கரையை கடக்க உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. ஏற்கனவே ஏரியின் நீர் மட்டம் 21 அடியை தாண்டி விட்டது.. இந்த நிலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால் நீர் மட்டம் 22 அடியை விரைவில் எட்ட இருக்கிறது.

ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதனால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments