பொலிவியாவில் கல்விச் சலுகைகள் கோரி போராட்டம்

0 1235
பொலிவியாவில் கல்விச் சலுகைகள் கோரி போராட்டம்

பொலிவியாவின் கோச்சபம்பா நகரில், போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததில் அப்பகுதி  போர்களமாக காட்சி அளித்தன.

அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விச் சலுகைகள் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பாதுகாப்புகவசங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  போராட்டக்காரர்களை அகற்ற முயன்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதோடு,போலீசார் மீது பொதுமக்கள் பொருட்களை வீசியெறிந்தனர்.

பின்னர் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை களைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments