ஆக்ஸ்போர்டு தடுப்பூசி விலை: அரசுக்கு ரூ.250, மருந்தகங்களுக்கு ரூ.1000 - சீரம் இந்தியா தகவல்
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை, டோஸ் ஒன்றுக்கு 250 ரூபாய் என்ற விலைக்கு அரசுக்கும். 1000 ரூபாய் என்ற விலையில் மருந்தகங்களுக்கும் விற்க உள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரியில், 10 கோடி தடுப்பூசிகள் தயாராகி விடும், பிப்ரவரியில் அது பல கோடிகளாக அதிகரிக்கும் என சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில், இந்த தடுப்பூசியின் இறுதி கட்ட சோதனை முடிவுகள் மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் சமர்ப்பிக்கப்படும் என்ற அவர், அதன் பின்னர் விநியோகத்தை துவக்குவது அவர்களின் முடிவைப் பொறுத்து இருக்கும் என்றார்.
Comments