வெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா நேபாளம் பயணம்...இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்

0 913
வெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா நேபாளம் பயணம்...இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்

வெளியுறவுத்துறை செயலாளர் ஷிரிங்லா வரும் 26 மற்றும் 27 தேதிகளில் நேபாளத்திற்கு செல்கிறார்.

அப்போது அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளை தனது பகுதிகளாக நேபாளம் குறிப்பிட்ட போது, இந்தியத் தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த வரைபடம் மாற்றியமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நாரவானே மற்றும் உளவுத்துறை தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் ஏற்கனவே நேபாளம் சென்று வந்தனர்.

இந்நிலையில் நேபாள உள்நாட்டு அரசியலில் சீனாவின் தலையீடு, இந்திய - நேபாள உறவு மறுசீரமைப்பு போன்றவை குறித்து ஷிரிங்லா பேச்சு நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments