அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற ஜாஸ் சுறா
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஜாஸ் ஆங்கில திரைப்படத்தில் வரும் சுறா மீன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1975ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஆஸ்கர் பரிசினை வென்றது. இந்த படத்தில் வரும் ராட்சத சுறா மாதிரிகள் 3 ஏற்கனவே அழிந்து போய் விட்டன. தற்போது 4வதாக எஞ்சி இருக்கும் ராட்சத சுறா மாதிரி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
544 கிலோ கிராம் எடையும், 7.6 மீட்டர் நீளமும் கொண்டது இந்த ராட்சத சுறா பைபர் கிளாசில் வடிவமைக்கப்பட்டதாகும். திரைப்படத்தில் வருவது போல் இந்த சுறா தனது வாயை அகலமாகத் திறந்து 116 பற்களும் வெளியே தெரியும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments