துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

0 12910
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகத்தில் 6-ம் எண்ணும், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 

மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தும் விதமாக, கடலூர், புதுச்சேரி, சென்னை, எண்ணூர், நாகை, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது துறைமுக பகுதியிலோ அல்லது அதற்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதிகளிலோ ஆபத்து அதிகம் என்பதை குறிக்க 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு அருகே வலது புறமாக புயல் கரையை கடக்க கூடும் என்பதை எச்சரிக்கும் வகையில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகத்தின் அருகே இடதுபுறமாக புயல் கரையை கடக்கும் என்பதை தெரிவிக்க 5-ம் எண் கூண்டு ஏற்றப்படும்

பாம்பன் துறைமுகத்தில் சூறைகாற்று வீசிவருவதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, 2வது நாளாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்த மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments